ஷா ஆலாம், நவ 11 : மோசமான மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாங்கூர் மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சி பொழுதுபோக்கு தளங்களும் உடனடியாகவும் மறுஅறிவிப்பு வரும் வரையிலும் முழுமையாக மூடப்படுகின்றன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சிலாங்கூர் மாநில வனத்துறை இந்த நடவக்கையை எடுத்துள்ளது.
இதனால் பொதுமக்கள் யாரும் மூடப்பட்ட பகுதிகளுக்குள் நுழையவோ அல்லது அங்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது என முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் ஆபத்தை உணர்ந்து, இந்த உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு, சிலாங்கூர் மாநில வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.forestry.selangor.gov.my ஐப் பார்வையிடலாம்.







