டிஜிட்டல் கற்றலை மேம்படுத்தும் ePraktis : எஸ்பிஎம் மாணவர்களுக்காக 2,000+ கேள்விகள்

11 நவம்பர் 2026, 9:18 AM
டிஜிட்டல் கற்றலை மேம்படுத்தும்  ePraktis : எஸ்பிஎம் மாணவர்களுக்காக 2,000+ கேள்விகள்
டிஜிட்டல் கற்றலை மேம்படுத்தும்  ePraktis : எஸ்பிஎம் மாணவர்களுக்காக 2,000+ கேள்விகள்
டிஜிட்டல் கற்றலை மேம்படுத்தும்  ePraktis : எஸ்பிஎம் மாணவர்களுக்காக 2,000+ கேள்விகள்

ஷா ஆலாம், நவ 11: படிவம் 4 மற்றும் படிவம் 5 மாணவர்கள் தங்களது கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவும் வகையில், 2,201 பயிற்சி கேள்விகளைக் கொண்ட 'ePraktis' கல்வித் திட்ட டிஜிட்டல் தளத்தை (ePraktis Program Tuisyen Rakyat Selangor - PTRS) சிலாங்கூர் மாநில அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது .

ஷா ஆலாம், செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் கல்வி உச்ச நிலை மாநாட்டின் போது, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி இந்தத் தளத்தைத் தொடக்கி வைத்தார்.

இந்த இ-பிடிஆர்எஸ் (e-PTRS) தளம் சிலாங்கூர் மாணவர்களுக்கு மட்டுமின்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

"தொடக்க மற்றும் இடைநிலைக்கல்வி நிலைகளில் உள்ள கல்வி இடைவெளிகளை நாங்கள் உணர்ந்துள்ளோம், அதனால்தான் இந்த பிடிஆர்எஸ் (PTRS) திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நாங்கள் ஏற்கனவே செய்து வரும் முயற்சிகளைக் குறைக்காமல், புதிய மாணவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறோம்.

இதன் தெளிவான நன்மைகள், குறிப்பாக 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளின் எஸ்பிஎம் (SPM) தேர்வு முடிவுகளில் மாநிலத்தின் சராசரி தேர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டுகளை விட சிறப்பாக உயர்ந்துள்ளதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மலேசிய கல்வி அமைச்சும் மாநில அரசின் இந்த முயற்சியை அங்கீகரித்துள்ளது," என்று அவர் கூறினார்.

மேலும் , சிலாங்கூர் முழுவதும் மொத்தம் 160,000 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர் என்றாரவர்.

முன்பு வெறும் நான்கு அடிப்படைப் பாடங்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டம் எட்டு பாடங்களை வழங்குகிறது.

"தற்போதைய தரவுகளின்படி, இ-பிடிஆர்எஸ் இணையதளத்தை சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 70,000-க்கும் அதிகமான மாணவர்களும், வெளிமாநிலங்களைச் சேர்ந்த 20,000 மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, சில மாநிலங்கள் சிலாங்கூர் மந்திரி பெசார் அறக்கட்டளை (Yayasan MBI) உடன் நேரடியாகக் கூட்டுமுயற்சியில் ஈடுபட்டுள்ளன.

முன்பு இரு மாவட்டங்கள் மட்டுமே இதில் இணைந்திருந்த நிலையில், தற்போது ஐந்து மாவட்டங்கள் இதில் பங்கேற்றுள்ளன, மேலும் 8,000 மாணவர்கள் இந்த பிடிஆர்எஸ் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றனர்," என்று அவர் தெரிவித்தார்.

இந்த 'ePraktis PTRS' தளம், படிவம் 4 மற்றும் 5 மாணவர்களுக்கான ஆறு முக்கிய பாடங்களின் பயிற்சி தொகுப்புகளை வழங்குகிறது. மாணவர்கள் படிப்படியாகத் தங்கள் புரிதலை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இக்கேள்விகள் பாடங்கள் மற்றும் தலைப்புகளின் அடிப்படையில் வரிசையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 2,201 கேள்விகளைக் கொண்டுள்ள இந்தத் திட்டத்தில் மலாய் மொழி, ஆங்கிலம், வரலாறு, அறிவியல், கணிதம் மற்றும் கூடுதல் கணிதம் ஆகிய ஆறு பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தத் தளம் ஊடாடும் பயிற்சி முறைகள் (interactive exercises) மற்றும் முறையான விளக்கங்களுடன் கூடிய விடைகளைக் கொண்டுள்ளது. இது மாணவர்கள் பாடத் தலைப்புகளை எளிதில் புரிந்துகொள்ளவும், தங்களின் கல்விப் படிநிலையை தாங்களே கண்காணித்துக் கொள்ளவும், தொடர்ச்சியான சுயவழிக் கற்றலை ஊக்குவிக்கவும் பெரிதும் உதவுகிறது.

2009 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட பிடிஆர்எஸ் (PTRS) திட்டம் என்பது சிலாங்கூர் மாநில அரசின் ஓர் இலவசக் கல்வித் திட்டமாகும்.

இது மாணவர்களின் கல்விச் சாதனைகளை மேம்படுத்துவதற்காக இ-பிடிஆர்எஸ் தளம் வழியாக டிஜிட்டல் கற்றல் பொருட்களையும், நேரடியாக வகுப்பறை மூலமான இலவசத் டியூஷன் வகுப்புகளையும் வழங்கி வருகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.