கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள SPM மாணவர்கள் இலவச டியூஷன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

11 ஜூலை 2026, 6:21 AM
கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள SPM மாணவர்கள் இலவச டியூஷன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள SPM மாணவர்கள் இலவச டியூஷன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள SPM மாணவர்கள் இலவச டியூஷன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஷா ஆலாம், ஜூலை 11: கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த படிவம் 5 மாணவர்கள், தங்களின் எஸ்.பி.எம் (SPM) தேர்வுக்குச் சிறந்த முறையில் தயாராகுவதற்கு ஏதுவாக, சிலாங்கூர் மக்கள் டியூஷன் திட்டத்தில் (PTRS-Program Tuisyen Rakyat Selangor) இணைய அழைக்கப்படுகிறார்கள்.

மாநில அரசின் இந்த இலவச டியூஷன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை, மாணவர்கள் தங்களின் அந்தந்தப் பள்ளிகள் மூலமாகவோ அல்லது ePTRS இணையப் பக்கத்தில் (https://eptrs.my/login) இணையம் வாயிலாக பதியலாமென அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் தெரிவித்தார்.

கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த அதிகமான மாணவர்கள் சிலாங்கூர் மாநில அரசின் இத்திட்டத்தைப் பயன்படுத்தி, தேர்வில் சிறந்த முடிவுகளைப் பெறுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் தனது ஃபேஸ்புக் (Facebook) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலவசப் பாடத்திட்டத்தின் கீழ் ஆறு முக்கியப் பாடங்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். அவை மலாய், ஆங்கிலம் கணிதம்,அறிவியல், வரலாறு மற்றும் கூடுதல் கணிதம் ஆகும்.

இது தவிர, இத்திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு ePTRS செயலி (app) மூலமாகக் கற்றல் காணொளிகள், கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நுட்பங்கள் மற்றும் மீள் பார்வை செய்வதற்கான மின்-புத்தகங்கள் (e-books) போன்ற கூடுதல் வசதிகளும் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு, சிலாங்கூர் மாநிலம் முழுவதும் படிவம் 4 மற்றும் படிவம் 5-ஐச் சேர்ந்த 160,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 10 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்ட இந்த பிடிஆர்எஸ் (PTRS) திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.