இன்று காலை சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 985-ஆக உயர்ந்தது

11 நவம்பர் 2026, 2:43 AM
இன்று காலை சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 985-ஆக உயர்ந்தது

ஷா ஆலம், நவ 11 : கோலா சிலாங்கூரில் உள்ள 5 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை இன்று காலை 10 மணி நிலவரப்படி 985 -ஆக உயர்ந்துள்ளது.

இது மொத்தம் 275 குடும்பங்களைக் குறிக்கிறது.

நேற்று இரவு பதிவான 934 பேருடன் ஒப்பிடுகையில் தற்போது மேலும் 51 பாதிக்கப்பட்ட மக்களும் 12 குடும்பங்களும் அதிகரித்துள்ளனர் என சமூக நலத்துறையின் தகவல் குறிப்பிடுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் டத்தோ மகாராஜா லேலா தேசியப் பள்ளி, பாரிட் மஹாங் தேசியப் பள்ளி, புக்கிட் கூச்சிங் சமய தொடக்கப் பள்ளி, பத்து 8 இஜோக் சமயப் பள்ளி மற்றும் ஜெயா செத்தியா தேசியப் பள்ளி ஆகிய 5 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, சிலாங்கூரில் கோலா சிலாங்கூர் மாவட்டம் மட்டுமே வெள்ள நிவாரண மையங்களில் மக்களைக் கொண்டுள்ள ஒரே மாவட்டமாக நீடிக்கிறது.

இதற்கிடையில், கோம்பாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர், பாலாய் ராயா கம்புங் கெனாங்கா நிவாரண மையத்தில் தொடர்ந்து தங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அதே நேரத்தில், பேராக் மாநிலத்தில் இரு மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 3 நிவாரண மையங்களில், 109 குடும்பங்களைச் சேர்ந்த 381 பேர் இன்னும் தங்கியுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.