சிலாங்கூர் வெள்ளம்: 5 நிவாரண மையங்களில் இன்னும் 883 பேர் தஞ்சம்

10 நவம்பர் 2026, 11:17 AM
சிலாங்கூர் வெள்ளம்: 5 நிவாரண மையங்களில் இன்னும் 883 பேர் தஞ்சம்

ஷா ஆலாம் நவ 10 : சிலாங்கூர், கோலா சிலாங்கூர் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக 247 குடும்பங்களைச் சேர்ந்த 883 போ் இன்னும் 5 தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என சமூக நலத்துறை தெரிவித்தது.

இதில் டத்தோ மகாராஜா லேலா தேசியப் பள்ளியில் மிக அதிகமாக 118 குடும்பங்களைச் சேர்ந்த 420 பேரும், பாரிட் மஹாங் தேசியப் பள்ளியில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 241 பேரும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மேலும், புக்கிட் கூச்சிங் ஆரம்ப சமயப் பள்ளியில் 132 பேரும், பத்து 8 இஜோக் சமயப் பள்ளியில் 77 பேரும், ஜெயா செத்தியா தேசியப் பள்ளியில் 13 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கோம்பாக் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் கம்புங் கெனாங்கா மண்டபத்தில் தொடர்ந்து தங்கியுள்ளனர்.

இதன் அடிப்படையில், சிலாங்கூர் மாநிலம் முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்தமாக 252 குடும்பங்களைச் சேர்ந்த 903 பேர் இன்னும் 6 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.