கோலாலம்பூர், நவ 11 : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, 21,477 அதிகாரிகள் , உறுப்பினர்கள் ஆகிய பலத்துடன் அரச மலேசிய போலீஸ் படை முழு தயார் நிலையில் உள்ளது.
1,788 தரைவழி வாகனங்கள், 656 படகுகள் மற்றும் 21 வான்வழிச் சொத்துக்கள் ஆகியவை, படையினரின் ஆயத்தப் பணிக்கு பலமாக இருப்பதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு, பொது அமைதி துறைக்கான இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமெட் யுஸ்ரி ஹசான் பஸ் ரி தெரிவித்தார்.
நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ள 3,045 வெள்ள அபாயப் பகுதிகளில் கிளந்தான் 609 பகுதிகளுடன் மிக அதிக ஆபத்துள்ள மாநிலமாக உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக பகாங் 572 பகுதிகளும், திராங்கானு 460 பகுதிகளும், சபா 348 பகுதிகளும் கொண்டுள்ளன.
மேலும், மீட்புக்குழுவினர் தங்களின் கண்காணிப்பை 263 முக்கியமான சரிவுப் பகுதிகளுக்கும், 31 நிலச்சரிவு அபாயப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளனர் என மொஹமெட் யுஸ்ரி தெரிவித்தார்.
2026 அக்டோபர் 27 -ஆம் தேதி தொடங்கிய இந்த வடகிழக்கு பருவமழை வரும் 2027 மார்ச் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அதிகாரப்பூர்வ தளம் அல்லது myCuaca செயலி மூலம் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பெறுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.






