ஷா ஆலம், ஜன 7: எதிர்வரும் ஜனவரி 11 வரை பருவமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.
தென் சீனக் கடலில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன், கிழக்கு தீபகற்பம் மற்றும் மேற்கு சரவாக்கில் தொடர் கனமழை பெய்யும் என்றும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
"இது தொடர்பாக, திரங்கானு, வடக்கு கிளந்தான் மற்றும் கிழக்கு பகாங் மாநிலங்களுக்கு ஜனவரி 8, 2026 வரை தொடர் கனமழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதோடு இது கிழக்கு ஜோகூரில் ஜனவரி 7 முதல் 8, 2026 வரை அமலில் இருக்கும்.
"இதற்கிடையில், இந்த எச்சரிக்கை மேற்கு சரவாக்கில் ஜனவரி 9 முதல் 10, 2026 வரை அமலில் இருக்கும். தென் சீனக் கடலில் ஜனவரி 8, 2026 வரை பலத்த காற்று மற்றும் கடல் சீற்ற எச்சரிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது," என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய மற்றும் மிகவும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் எப்போதும் www.met.gov.my என்ற வலைத்தளத்தையும் அதிகாரப்பூர்வ மெட்மலேசியா சமூக ஊடகங்களையும் நாடவும் அல்லது myCuaca செயல்பாட்டை பதிவிறக்கம் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பெர்னாமா


