கோலாலம்பூர், டிசம்பர் 22 – பருவமழை எழுச்சி எதிர்வரும் டிசம்பர் 25 முதல் 29 வரை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நிலை தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் தொடர் மழையை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், தென்சீனக் கடலில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடல்சார் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஆபத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள், குறிப்பாக பாதிக்கப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள், எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தது. மேலும் சமீபத்திய வானிலை தகவல்களை met.gov.my இணையதளம், மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca செயலி போன்றவற்றில் சரிபார்க்க வேண்டும் என மெட்மலேசியா வலியுறுத்தியுள்ளது. வானிலை நிலவரத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அவ்வப்போது அறிவிக்கப்படும்.


