சிலாங்கூர் வெள்ளம்: 5 நிவாரண மையங்களில் 632 பேர் அடைக்கலம்

9 நவம்பர் 2026, 6:22 AM
சிலாங்கூர் வெள்ளம்:  5 நிவாரண மையங்களில் 632 பேர் அடைக்கலம்

ஷா ஆலாம், நவ 9 : சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இன்று காலை 11 மணி நிலவரப்படி 5 தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, 177 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 632 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் நான்கு வெள்ள நிவாரண மையங்களும், ஷா ஆலாம் மாவட்டத்தில் ஒரு மையமும் திறக்கப்பட்டுள்ளன என மக்கள் சமூக நலத்துறையின் வெள்ள தகவல் அகப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள மையங்களின் விவரப்படி, டத்தோ மகாராஜா லேலா தேசியப் பள்ளியில் அதிகபட்சமாக 301 பேரும், பாரிட் மஹாங் தேசியப் பள்ளியில் 137 பேரும், இஜோக், பத்து எட்டு சமயப் பள்ளியில் 77 பேரும், ஜெயா செத்தியா தேசியப் பள்ளியில் 21 பேரும் தங்கியுள்ளனர்.

மேலும் ஷா ஆலாம் செக்ஷன் யு 6 -இல் உள்ள கம்புங் மெலாயு சுபாங்-கில் திறக்கப்பட்டுள்ள சியந்தான் மண்டபத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு, கிள்ளான் துறைமுகத்தில் நவம்பர் 7 -ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை பெரிய கடல் அலை எழுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனால் கடல் மட்டம் 5. 2 மீட்டர் உயரத்தை எட்டும் என கணிக்கப்பட்டது.

இதனுடன் சேர்த்து, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் ஒவ்வொரு நாளும் மாலையில் நூறு மில்லிமீட்டருக்கும் அதிகமான கடுமையான மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.