ஷா ஆலாம், நவ 10 : உடனடியாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்ற ஊகங்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்திருக்கிறார்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தமது பதவியிலிருந்து விலகும் முடிவு செய்துள்ளதாலும், இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசானின் செனட்டர் பதவி காலம் முடியவிருப்பதாலும் இந்த ஊகங்கள் பரவி வருகின்றன.
இந்த இரு நிகழ்வுகள் அமைச்சரவையில் இரு இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, " இப்போதைக்கு அவசரப் படத் தேவையில்லை " என்று பிரதமர் அன்வார் பதிலளித்தார்.
அமீர் ஹம்சாவின் மேலவை உறுப்பினர் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது .
அவர் அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமானால், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வேண்டும் .
அவரது நிலை குறித்து பிரதமரிடம் கேட்கப்பட்டபோது, "அப்படியா? அவர் அது குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை" என்று சுருக்கமாகப் பதிலளித்தார்.
இதற்கிடையில், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வீட்டுக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இருந்து விலகும் தமது முடிவில் அந்தோனி லோக் உறுதியாக உள்ளார் .







