ஷா ஆலாம், செப் 29 : சிலாங்கூரின் கிள்ளான் மற்றும் கோலா லங்காட் ஆகிய பகுதிகளில் இன்றிரவு 7 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதோடு, பலத்த காற்றும் வீசக்கூடுமென மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதே போன்ற எச்சரிக்கை கெடா,பினாங்கு, பேராக், பகாங், நெகிரி செம்பிலான்,மலாக்கா,ஜொகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
கெடாவில், பொகோக் செனா, கோத்தா ஸ்டார், பாடாங் தெராப், பெண்டாங், யான், கோலா மூடா, கூலிம், பண்டார் பாரு, சிக் மற்றும் பாலிங்;
பகாங்கில் , பெரா, ரொம்பின், குவாந்தான், மாரான் மற்றும் ஜெராண்டுட்;
நெகிரி செம்பிலானில், தம்பின் மற்றும் ஜெம்போல்;
ஜொகூரில், செகாமட், தங்காங், மூவார், பொந்தியான் மற்றும் பத்து பகாட்;
சரவாக்கில், ஸ்ரீ அமான், பெத்தோங், சாரிகேய், மாராடோங், சிபு, செபுயாவ் (சமரஹான்) மற்றும் சோங் (காபிட்) ஆகிய பகுதிகளுக்கு மலேசிய வானிலை ஆய்வுத் துறை அந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.







