ஷா ஆலாம், அக் 17- இன்று மாலை 5:00 மணி வரை மலேசியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று மதியம் வெளியாகியுள்ள இந்த வானிலை எச்சரிக்கையின்படி, சிலாங்கூர் மாநிலத்தில் கோம்பாக், பெட்டாலிங், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், உலு லங்காட் மற்றும் செபாங் ஆகிய ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளைப் பொறுத்தவரை, பெர்லிஸ், கெடா, பினாங்கு, மலாக்கா ஆகிய மாநிலங்கள் முழுமையாகவும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய கூட்டரசு பிரதேசங்கள் முழுமையாகவும் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேராக் மாநிலத்தில் செலாமா, உலு பேராக், கிரியான், லாருட் மாடாங், கோலா கங்சார், முவாலிம், கிந்தா, கம்பார் மற்றும் பாடாங் பத்தாங் ஆகிய இடங்களிலும்,
கிளாந்தான் மாநிலத்தில் குவா மூசாங், ஜெலி மற்றும் கோலா கிராய் ஆகிய இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், திராங்கானு மாநிலத்தில் உலு திராங்கானு, டுங்குன், செதியு, கோலா நெருஸ், கெமாமான் மற்றும் பெசுட் ஆகிய இடங்களும்,
பகாங் மாநிலத்தில் தெமர்லோ, மரான், ரொம்பின், பெரா, கேமரன் மலை, லிப்பிஸ், ஜெராண்டுட், ரவுப், குவாந்தான் மற்றும் பெந்தோங் ஆகிய இடங்களும் பாதிக்கப்படலாம்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சிரம்பான், போர்ட் டிக்சன், ஜெலுபு மற்றும் ரெம்பாவ் ஆகிய பகுதிகளிலும்,
ஜொகூர் மாநிலத்தில் பத்து பகாட், மெர்சிங், ஜொகூர் பாரு, குலாய், பொந்தியான், கோத்தா திங்கி, செகாமட் மற்றும் குளுவாங் ஆகிய பகுதிகளிலும் இந்த மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மலேசியாவில், சரவாக் மாநிலத்தின் ஸ்ரீ அமான், லிம்பாங், முக்கா, சரிகேய், சிபு, பெத்தோங், பிந்துலு மற்றும் மிரி ஆகிய இடங்களிலும், சபா மாநிலத்தின் பெடாலோமான், தாவாவ், சண்டக்கான், கூடாட் மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளிலும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






