ஷா ஆலாம், நவ.3: சிலாங்கூரில் 4 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை உலு சிலாங்கூர், கோம்பாக், சபாக் பெர்னாம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
மேலும், கோலாலம்பூர், பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், திரங்கானு, நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களுக்கும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலையில் ஏற்படக்கூடிய திடீர் மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வானிலை நிலவரம் தொடர்பான அண்மைய அறிவிப்புகளை மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு தளங்கள் மூலம் தொடர்ந்து அறிந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





