'பான் கால்வாய்' சுற்றுலாவுக்கு ஆதரவளிப்பதோடு உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகிறது

8 நவம்பர் 2026, 11:45 AM
'பான் கால்வாய்'  சுற்றுலாவுக்கு ஆதரவளிப்பதோடு உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகிறது
'பான் கால்வாய்'  சுற்றுலாவுக்கு ஆதரவளிப்பதோடு உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகிறது
'பான் கால்வாய்'  சுற்றுலாவுக்கு ஆதரவளிப்பதோடு உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகிறது

சபாக் பெர்னாம், நவ 8: சபாக் பெர்னாம், பான் கால்வாய் பகுதியின் மேம்பாடு, பொருளாதார நலன்கள், சமூக நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை சமநிலையில் பேணும் ஒரு வளர்ச்சித் திட்டத்திற்கு அடித்தளமாக அமைகிறது என சிலாங்கூர் மாநில பொது சுகாதார- சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் தெரிவித்தார்.

பான் கால்வாய் விழா (Karnival Ban Canal) போன்ற நிகழ்ச்சிகளின் ஏற்பாடு, இப்பகுதியை வட சிலாங்கூரின் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக வலுப்படுத்த உதவுகிறது என்று அவர் கூறினார்.

அவ்விழாவின் நிறைவு விழாவில் உரையாற்றிய அவர், பான் கால்வாய் பகுதி, பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய 297,661.25 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட, யுனெஸ்கோவின் (UNESCO) மனித- உயிர்க்கோளம் (MAB) திட்டத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள வட சிலாங்கூர் உயிர்க்கோளக் காப்பக (AUSBR) நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில பொது சுகாதார- சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன்

சுற்றுச்சூழலின் முக்கிய சொத்தாக விளங்கும் இயற்கை வளங்களைச் சிதைக்காமல், பொறுப்புணர்வுடன் கூடிய சுற்றுலா மேம்பாட்டைத் தாங்கள் விரும்புவதாகவும், அதற்காக இயற்கை சார்ந்த சுற்றுலா, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த விழாவிற்கு இம்முறை 34,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்து சிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்தாண்டு 32,100 -ஆக இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி கொரியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளதால் இது சபாக் பெர்னாமின் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என ஜமாலியா ஜமாலுதீன் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த மூன்று நாள் விழாவிற்கு நிர்ணயிக்கப்பட்ட 38,000 பார்வையாளர்கள் என்ற இலக்கை எட்ட முடியும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் கழக (MBI) குழும தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டிஎஸ். சைபுல்யாசான் எம் யூசோப் தெரிவித்தார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் கழக (MBI) குழும தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டிஎஸ். சைபுல்யாசான் எம் யூசோப் மற்றும் சிலாங்கூர் மாநில பொது சுகாதார- சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன்

பான் கால்வாய் விழா விளையாட்டு, விவசாய சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஒரே நிகழ்ச்சியில் இணைந்திருப்பதை அடுத்தும் , அவ்விழா வரும் காலங்களில் மேலும் பல வெளிநாட்டுப் பார்வையாளர்களை ஈர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சபாக் பெர்னாமில் நடைபெற்ற பான் கால்வாய் விழா

MBI நிறுவனம், சபாக் பெர்னாம் மேம்பாட்டு பகுதி திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்த இந்த 2026 பான் கால்வாய் விழா கடந்த நவம்பர் 6-ஆம் தேதி முதல் பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

இதில் இயற்கை பாரம்பரிய ஓட்டம் , இசை கச்சேரி, இரவு நேர சப் போலோ (Night SUP Polo) விளையாட்டு மற்றும் உள்ளூர் தொழில்முனைவோரின் விற்பனைச் சந்தை உள்ளிட்ட பல அங்கங்கள் இடம்பெற்றன.

சபாக் பெர்னாம், பான் கால்வாய் விழாவில் நடைபெற்ற போட்டி

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இந்த பான் கால்வாய் விழா, உள்ளூர் சமூகம் மற்றும் தொழில்முனைவோருக்குப் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், சபாக் பெர்னாம் பகுதியில் புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை ஆராய்வதற்குப் பல தனியார் நிறுவனங்களை ஈர்க்கும் பெரும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.