வெள்ள அபாயம் : சிலாங்கூரில் தயார் நிலையில் 141 நடமாடும் நீர் இறைக்கும் பம்புகள்

7 நவம்பர் 2026, 2:17 AM
வெள்ள அபாயம் : சிலாங்கூரில் தயார் நிலையில் 141 நடமாடும் நீர் இறைக்கும் பம்புகள்
வெள்ள அபாயம் : சிலாங்கூரில் தயார் நிலையில் 141 நடமாடும் நீர் இறைக்கும் பம்புகள்

ஷா ஆலாம், நவ 11 : சிலாங்கூர் நீர்ப்பாசன, வடிகால் துறை வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக மாநிலத்தில் வெள்ள அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் 141 நடமாடும் நீர் இறைக்கும் பம்புகளை நிறுவியுள்ளது.

இவற்றுடன் கூடுதலாக 53 நிரந்தர நீர் பம்புகளும் மாநிலம் முழுவதும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடமாடும் பம்புகள் ஒவ்வொன்றும் வினாடிக்கு 300 முதல் 1,000 லிட்டர் வரையிலான தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்டவை. அதையடுத்து, வெள்ளம் ஏற்படும் போது தேங்கும் நீரின் அளவை இது பெருமளவில் குறைக்கும்.

அவசரத் தேவைகளுக்காக தயாராக வைக்கப்பட்டுள்ள பம்புகளை வெள்ளம் பாதித்த இடங்களுக்குக் கொண்டு சேர்க்க, தூரம் மற்றும் பாதையின் வசதிகளைப் பொறுத்து 3 முதல் 5 மணி நேரம் வரை எடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளான ஷா ஆலாம், சுபாங், கிள்ளான் ஆகிய இடங்களுக்கு இந்த பம்புகளை நிலைநிறுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளும் முன்னேற்பாடாக , சிலாங்கூர் நீர்ப்பாசன வடிகால் துறை, மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கங்களின் உதவியோடு ஆண்டுதோறும் கூடுதல் நடமாடும் பம்புகளைக் கொள்முதல் செய்து வருகிறது.

பெரும்பாலான வெள்ள அபாயப் பகுதிகளில் ஏற்கனவே நீர் இறைக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள வேளையில், சில இடங்களில் புதிய நிலையங்கள் கட்டுமானப் பணியிலும் திட்டமிடல் கட்டத்திலும் உள்ளன.

கடந்த ஆண்டு தரவுகளின்படி, சிலாங்கூர் மாநிலம் முழுவதும் 56 வெள்ளப் பாதிப்புப் பகுதிகளும் 232 வெள்ள அபாயப் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதில் அதிகபட்சமாக கிள்ளான் மாவட்டத்தில் 13 இடங்களும், பெட்டாலிங்கில் 11 இடங்களும், கோம்பாக்கில் 10 இடங்களும், உலு லங்காட்டில் 9 இடங்களும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வெள்ளம் தொடர்பான தற்போதைய நிலவரங்களை மலேசிய நீர்ப்பாசன வடிகால் துறையின் (JPS) 'Public InfoBanjir' மற்றும் சிலாங்கூரின் JPS - நீர்ப்பாசன வடிகால் துறையின் 'InfoBanjir' அதிகாரப்பூர்வ இணையத்தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும், மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் 'myCuaca (version 3.0)' செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் தங்களின் இருப்பிடத்திற்கான வானிலை எச்சரிக்கைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.