ஜெராண்டுட், ரொம்பின் பகுதிகளில் நாளை முதல் வெள்ளம் ஏற்படலாம்

10 நவம்பர் 2026, 4:06 AM
ஜெராண்டுட், ரொம்பின் பகுதிகளில் நாளை முதல் வெள்ளம் ஏற்படலாம்

குவாந்தான், நவ 10 : பகாங், ஜெராண்டுட் மற்றும் ரொம்பின் ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய ஆற்றுப் படுகைப் பகுதிகள், தாழ்வான இடங்கள் மற்றும் ஆபத்து அதிகம் உள்ள பகுதிகளில், நாளை (நவம்பர் 11) அதிகாலை 1.00 மணி முதல் சனிக்கிழமை (நவம்பர் 14) இரவு 11.59 மணி வரை வெள்ளம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் நேற்று காலை வெளியிட்ட தொடர் மழைக்கான எச்சரிக்கை மற்றும் நீர்ப்பாசன வடிகால் துறையின் வெள்ள முன்னறிவிப்புகளின் அடிப்படையில் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெராண்டுட் மாவட்டத்தில் பெல்டா ஜெங்கா 24 (பிளாக் 11), தாமான் ரியா, சுங்கை ஜான் குடியிருப்பு, பெல்டா கெலாங்கி 1 மற்றும் 3, கம்புங் பாரு, கம்புங் பெசுல், கம்புங் ஜெராங்சாங் ஆகிய பகாங் ஆற்றுப் படுகையைச் சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தாழ்வான பகுதிகள் இதனால் பாதிக்கப்படலாம்.

மேலும் கம்புங் சுங்கை சியாம், கம்புங் லதா காசா, கம்புங் கோலா பெங்காவு, கம்புங் கோலா தே, கம்புங் பத்து பாலாய், கம்புங் செம்படான், பெல்டா சுங்கை ரெடாங், பெல்டா பாடாங் பியோல் மற்றும் கம்புங் பாயா காருக் ஆகிய இடங்களும் இதில் அடங்கும்.

ரொம்பின் மாவட்டத்தில் ரொம்பின் ஆற்றுப் படுகையைச் சுற்றியுள்ள கம்புங் ஆயுர், கம்புங் மெரிப்போ, கம்புங் தெபு ஈத்தாம், பந்தாய் பெர்னாஸ், கம்பாங் ஆயாவ், லேபான் சோண்டாங், கம்புங் காடிங் மற்றும் கம்புங் சராங் தியோங் ஆகிய தாழ்வான பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அத்துடன் பகாங் ஆற்றுப் படுகையைச் சுற்றியுள்ள கம்புங் மிகாங், கம்புங் புலு நிபிஸ், கம்புங் சிம்பாங் செப்பாயாங், கம்புங் செப்பாயாங், கம்புங் தெங்கா, கம்புங் தெகெக், கம்புங் செரிங்கின் மற்றும் கம்புங் ஜாங்லாவ் 1, 2, 3 ஆகிய பகுதிகளும் ஆபத்தில் உள்ளன.

இந்த வெள்ளப் பெருக்கு கணிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ ஏற்படலாம் என்பதால், பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பேரிடர் நிர்வாக அமைப்புகளின் உத்தரவுகளைப் பின்பற்றி நடக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.