சிலாங்கூர் JPS-இன் புதிய 'இ-சிபி' (e-CP) இலக்கவியல் தளம் அறிமுகம்

14 பிப்ரவரி 2026, 3:49 AM
சிலாங்கூர் JPS-இன் புதிய 'இ-சிபி' (e-CP) இலக்கவியல் தளம் அறிமுகம்

ஷா ஆலம், பிப் 13 - சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS), பொதுமக்களுக்கும் மேம்பாட்டாளர்களுக்கும் வழங்கப்படும் சேவைகளை நவீனப்படுத்தும் நோக்கில் 'இ-சிபி' (e-CP) எனும் இணையம் வழியிலான வடிகால் பங்களிப்புக் கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

நேற்று ஷா ஆலமில் நடைபெற்ற ஜேபிஎஸ் சிலாங்கூர் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க தின விழாவில், சிலாங்கூர் JPS இயக்குநர் டத்தோ முகமது நஸ்ரி யாஸ்மின் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த புதிய முறை குறித்து அவர் பேசுகையில், "வழக்கமான கையேடு முறையிலான கட்டணச் செயல்பாடுகளுக்கு மாற்றாக, மிகவும் முறைப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட ஒரு தளமாக 'இ-சிபி' விளங்கும்" என்றார்.

மாநில அரசின் சேவை வழங்கல் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் திட்டத்திற்கு (RSTU) இணங்க, அரசாங்க நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தைப் புகுத்தி, செயல்திறனை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

மேலும், மாநிலத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் தற்போதைய நிலையை பொதுமக்கள் நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் 'வெள்ளத் தடுப்புத் திட்டப் பணி முன்னேற்ற டாஷ்போர்டு' ஒன்றையும் அவர் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அரசாங்கத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.