வகுப்பறையில் மயக்க நிலையில் மாணவர்: 3 வகை போதைப்பொருளை உட்கொண்டிருந்தார்

5 நவம்பர் 2026, 10:31 AM
வகுப்பறையில் மயக்க நிலையில் மாணவர்: 3 வகை  போதைப்பொருளை உட்கொண்டிருந்தார்

ஷா ஆலாம், நவ 5 : வகுப்பறையில் மாணவர் ஒருவர் மயக்க நிலையில் இருக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சோதனையில் அந்த மாணவர் மூன்று வகையான போதைப் பொருட்களை உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்டது.

திரெட்ஸ் (Threads) சமூக ஊடகத்தில் அந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவர் மேற் நடவடிக்கைக்காகக் கைது செய்யப்பட்டதாக, நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

விசாரணையில், அந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி நீலாயில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் நடந்ததாக நம்பப்படுகிறது.

"மின்னணு சிகரெட் (Vape) பயன்படுத்தியதால் பள்ளி மாணவர் ஒருவர் மயக்க நிலையில் இருப்பதாகக் கூறப்படும் காணொளி ஒன்று, நேற்று முதல் திரெட்ஸ் சமூக ஊடகத்தில் வைரலாகி வருவதை நெகிரி செம்பிலான் போலீசார் கவனித்தனர். அதன் தொடர்ச்சியாகப் போலீசார் உடனடியாக விசாரணையை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மாணவரை அடையாளம் கண்டனர்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

அந்த மாணவர் மீது நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் கெட்டமின் (Ketamine), பென்சோடியாசெபைன் (Benzodiazepine - Benzo) மற்றும் டி.ஹெச்.சி (THC) ஆகிய மூன்று வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்ததாக அல்சாஃப்னி கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாகப் போலீஸ் புகாரும் செய்யப்பட்டுள்ளது.

மேற் நடவடிக்கைக்காக அந்த மாணவர் 1983-ஆம் ஆண்டு போதைக்கு அடிமையானவர்கள் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) சட்டப் பிரிவு 3(1)-இன் கீழ் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பிடம் (AADK) ஒப்படைக்கப்படுவார்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.