நீலாய், டிச 9- கடந்த மே மாதம் 16 வயதுடைய ஓர் இளம்பெண்ணிடம் கருவுறும் நிலையில் பாலியல் வல்லுறவு கொண்டதாக சந்தேகிக்கப்படும் வங்காளதேச நாட்டு ஆடவர் ஒருவருக்கு எதிராக ஏழு நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டது.
சிரம்பான் மாஜிஸ்டிரேட் நீதிமன்ற நீதிபதி, ஃபர்ஹா சுலைமான் இந்த தடுப்புக்காவல் உத்தரவை 31 வயதான சந்தேக நபருக்கு வழங்கியதாக நீலாய் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டன் ஜொஹாரி யஹ்யா கூறினார்.
டிசம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை சந்தேக நபர் தடுப்புக்காவலில் இருப்பார் என்றும் இந்த வழக்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 376இன் கீழ் விசாரிக்கபடுவதாக குறிப்பிட்டார்.
தாமான் செமாராக்கில் உள்ள மளிகை கடை ஒன்றில் சந்தேக நபர் இந்த குற்றத்தைப் புரிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.


