நீலாயில் வெளிநாட்டு பெண் தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை  

4 மார்ச் 2026, 4:43 AM
நீலாயில் வெளிநாட்டு பெண் தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை   

நீலாய், மார்ச் 4 —இங்குள்ள ஒரு தொழிலாளர் விடுதியின் நான்காவது மாடி படிக்கட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு 11.21 மணியளவில் உள்ளூர் ஆடவர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட அவசர அழைப்பின் மூலம் காவல்துறைக்கு இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தது.

முப்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்ததாகவும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் முதற்கட்டப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

தடயவியல் சோதனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் பலமுறை வெட்டப்பட்ட காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

தனிப்பட்ட மோதல் அல்லது நிதிப் பிரச்சனை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வேளையில், தப்பியோடிய சந்தேக நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட காவல்துறை, தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக நீலாய் தலைமையகத்தைத் (06-7904222) தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.