இரு போலீஸ் அதிகாரிகள் ஷுஹைலி மீது வழக்குப் பதிவு

5 நவம்பர் 2026, 5:58 AM
இரு போலீஸ் அதிகாரிகள் ஷுஹைலி மீது வழக்குப் பதிவு

ஷா ஆலாம், நவ 5 : டத்தோஸ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் சாய்ன் (Mohd Shuhaily Mohd Zain) தங்களைத் தாக்கியதாகக் கூறி, இரு போலீஸ் அதிகாரிகள் நேற்று அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு பாதுகாப்பு அமைப்பின் (AKPS) தலைமை இயக்குநரான ஷுஹைலி மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

லான்ஸ் கோப்ரல் முகமட் எக்மால் சோஃப்வான் (Muhammad Ekmal Sofwan) மற்றும் லான்ஸ் கோப்ரல் முகமட் ஃபாயிஸ் (Mohammad Faiz) ஆகிய இரு புகார்தாரர்களும் தங்களின் வழக்கறிஞர் நிறுவனம் மூலமாக செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்குப் பதிவை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் முஹமட் ஷுஹைலி மட்டுமே ஒரே பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

சட்டவிரோத தடுப்பு, தாக்குதல் , அவதூறு அடிப்படையில் அந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் கடுமையாக நடத்தப்பட்டது, முஹமட் ஷுஹைலியின் தனிப்பட்ட ஒரு செயலாகும் ; இதில் மலேசிய அரசாங்கத்திற்கு சம்பந்தம் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1-ல் இரு போலீஸ் அதிகாரிகளுக்கு காயம் ஏற்படுத்தியதாக முகமட் ஷுஹைலி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இது தொடர்பாக அக்டோபர் 21 -ஆம் தேதி செப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து, முகமட் ஷுஹைலி விசாரணை கோரியுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.