கேஎல்ஐஏ முனையம் 1-இல் பயணிகள் வருகை விபரங்களை அறிய ஹாலோகிராம் தொழில்நுட்பம்

26 அக்டோபர் 2026, 8:58 AM
கேஎல்ஐஏ முனையம் 1-இல் பயணிகள் வருகை விபரங்களை அறிய ஹாலோகிராம் தொழில்நுட்பம்

செப்பாங்,அக் 26: மலேசியாவிற்கு வரும் பயணிகள், வருகை நடைமுறைகள் குறித்த தகவல்களை எளிதாகப் பெறுவதற்கு ஏதுவாக, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1-இன் சாட்டிலைட் கட்டிடத்தில், புதிய ஹாலோகிராம் (Hologram) தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு பாதுகாப்பு அமைப்பு (ஏகேபிஎஸ் )இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம், பயணிகள் தங்களுக்குத் தேவையான தகவல்களை எளிதில் பெறும் முயற்சியாக இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஏகேபிஎஸ் (AKPS) துணை தலைமை இயக்குநர் ( நிர்வாகம்) இஸ்மாயில் மொக்தார் கூறினார்.

கேஎல்ஐஏ சாட்டிலைட் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த ஹாலோகிராம், புதிதாக நாட்டிற்குள் வரும் பயணிகளுக்கு, வருகையின் போது அவர்கள் தயார் செய்ய வேண்டிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் குறித்து வழிகாட்டும்," என்று அவர் கூறினார்.

இன்று இங்கு நடைபெற்ற ஏகேபிஎஸ்-சின் 2-வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மற்றொரு நிலவரம் குறித்துப் பேசிய இஸ்மாயில், மின்னணு மற்றும் மின்சாரக் கழிவுகளை ஏற்றிய 1,259 கொள்கலன்கள், இவ்வாண்டு இறுதிக்குள் நாட்டிலிருந்து திருப்பி அனுப்ப ஏகேபிஎஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார்.

"மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்யும் பிரச்சினை, நாட்டின் நுழைவாயில்களில் உள்ள அச்சுறுத்தல்கள் எவ்வளவு சிக்கலானவை என்பதை நிரூபிக்கிறது.

இதற்கான அமலாக்கம் என்பது கொள்கலன்களைத் தடுப்பதுடன் மட்டும் முடிந்துவிடாது; ஆவணங்களைச் சரிபார்ப்பது, தொழில்நுட்பப் பரிசோதனை, சம்பந்தப்பட்ட தரப்பினரை அடையாளம் காண்பது மற்றும் தொடர் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.