நீதிமன்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தாலும் AKPS தலைமை இயக்குநர் பதவியில் மாற்றம் இல்லை

21 அக்டோபர் 2026, 8:09 AM
நீதிமன்ற  குற்றச்சாட்டை  எதிர்நோக்கியிருந்தாலும்  AKPS  தலைமை இயக்குநர் பதவியில் மாற்றம் இல்லை

செப்பாங், அக் 21 : டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் சைய்ன், இரு போலீஸ் அதிகாரிகளைக் காயப்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தாலும், மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு பாதுகாப்பு நிறுவனத்தின்(AKPS) தலைமை இயக்குநர் எனும் அவரது பதவியில் எந்த மாற்றமும் இல்லை.

அவர் வழக்கம் போல் தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்று அவரது வழக்கறிஞர் டத்தோ ரொசால் அசிமின் அஹ்மாட் தெரிவித்தார்.

அரசுப் பணியில் முகமட் ஷுஹைலியின் பதவி நிலை குறித்த எந்தவொரு முடிவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத் துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று அவர் கூறினார்.

"தற்போதைய நிலவரப்படி, எந்த உத்தரவும் இல்லாததால், அவர் வழக்கம் போல் தொடர்ந்து பணியாற்றுவார்," என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று செப்பாங் செஷன்ஸ் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் நடந்த வழக்கு விசாரணைக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்துப் பேசிய ரொசால், முகமட் ஷுஹைலி ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 1,500 ரிங்கிட் வீதம், மொத்தம் 3,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையுடன் ஒரு நபர் உத்தரவாதத்தில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்ததாகக் கூறினார்.

முன்னதாக, 54 வயதான முகமட் ஷுஹைலி மீது,சிறப்புப் பிரிவு அதிகாரிகளான முகமட் ஃபாயிஸ் முகமட் சமான், மற்றும் முஹம்மட் எக்மால் சோஃப்வான் டிரிமன் ஆகிய இருவரைக் காயப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, முகமட் ஃபாயிஸ் விசாரணை கோரியுள்ளார்.

முகமட் ஷுஹைலி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருவரை நோக்கி கோபமாக சத்தமிடுவதும், அதில் ஒருவரின் காதைப் பிடித்து இழுப்பதும் போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.