சிரம்பான், அக் 26 - மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு - பாதுகாப்பு அமைப்பின் அதிகாரியைக் கொலை செய்ததாக அவரது கணவர் கைருடின் சாஃபிஆய் மீது இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் இந்த குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதால், இன்று அந்நபரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
அக்டோபர் 15-ஆம் தேதி மாலை 7 மணியளவில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டதோடு, அவரது உடலின் சில பாகங்களில் கத்தி குத்துக் காயங்களும் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.
35 வயது நோர்ஹஸ்வானி இப்ராஹிம் நீலாயில் உள்ள கேஎல்ஐஏ பொதுச் சேவை துறையின் வீடமைப்பு பகுதியில் தனது வீட்டில் இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்படார்.
இக்கொலை வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை மற்றும் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக நீதிமன்றம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.







