தெலுக் இந்தானில் ஆடவர் வெட்டிக் கொலை; உள்ளூர் பெண் கைது

4 நவம்பர் 2026, 7:47 AM
தெலுக் இந்தானில் ஆடவர் வெட்டிக் கொலை; உள்ளூர் பெண் கைது

பெட்டாலிங் ஜெயா, நவ.4: பேராக், தெலுக் இந்தானில் கடை ஒன்றின் முன்னால் பாராங் கத்தியால் தாக்கப்பட்ட 48 வயது ஆடவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் மூன்று ஆடவர்கள் பாராங் கத்தியால் பாதிக்கப்பட்ட நபரைத் தாக்கியதாக ஹிலிர் பேராக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுவா கோக் லியான் தெரிவித்தார்.

பேராக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுவா கோக் லியான்

ஆரம்பக்கட்ட விசாரணையில், தாக்குதலில் படுகாயமடைந்த அந்த ஆடவர் உடனடியாக தெலுக் இந்தான் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக உறுதிபடுத்தப்பட்டது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றமாக விசாரிக்கப்பட்டு வருவதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் ஹிலிர் பேராக் மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தை 05-6299222 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறு சுவா கோக் லியான் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையும் அணுகலாம்.

விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், சம்பவம் குறித்து ஆதாரமற்ற ஊகங்களை வெளியிடுவதையோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூக ஊடகங்களில் பரப்புவதையோ தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.