ஷா ஆலாம், அக் 31 : சிலாங்கூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று இரவு 9 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சிலாங்கூரில் ஹுலு சிலாங்கூர், சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், பெட்டாலிங் மற்றும் கோம்பாக் ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கெடாவின் கோத்தா செத்தார், பொக்கோக் செனா, பாடாங் தெராப், பாலிங், சிக், பெண்டாங், கோலா மூடா மற்றும் யான் ஆகிய மாவட்டங்களும்,
பேராக்கில் (செலாமா, லாருட் மாடாங், மஞ்சோங், கிரியான் மற்றும் ஹுலு பேராக்), திரெங்கானுவில் (டுங்குன்) மற்றும் பகாங்கில் (ஜெராண்டுட் மற்றும் லிப்பிஸ்) ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இது தவிர, கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் (தம்பின்), மலாக்கா (ஜாசின்) மற்றும் ஜொகூர் (தங்காங் மற்றும் மூவார்) ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சரவாக்கில் காபிட், மிரி, லிம்பாங், ஸ்ரீ அமான், சிபு, பிந்துலு மற்றும் கூச்சிங் ஆகிய இடங்களிலும், சபாவில் பெடாலோமான், பந்தாய் பாராட், சண்டாக்கான் மற்றும் லாபுவானிலும் இதே போன்ற வானிலை நிலவக்கூடும்.







