ஷா ஆலாம், அக்.30 – சிலாங்கூரில் கோம்பாக், உலு சிலாங்கூர், மற்றும் உலு லங்காட் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் இதேபோன்ற சீரற்ற வானிலை நிலவக்கூடும் என மெட்மலேசியா தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் வானிலை தொடர்பான அண்மைய மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெற www.met.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதுடன், வானிலை ஆய்வு மையத்தின் சமூக ஊடகப் பக்கங்களையும் பின்தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வானிலை எச்சரிக்கைகள் மற்றும் முன்னறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள myCuaca செயலியையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.






