சிலாங்கூரின் 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

20 அக்டோபர் 2026, 8:17 AM
சிலாங்கூரின் 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

ஷா ஆலாம், அக். 20 – சிலாங்கூரின் 4 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கோலாலம்பூர் முழுவதும், மலாக்கா, கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் இதேபோன்ற சீரற்ற வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வானிலை நிலவரத்தைக் கவனித்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.