ஷா ஆலாம், அக். 18 – சிலாங்கூரின் எட்டு மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை கோம்பாக், பெட்டாலிங், கிள்ளான், உலு லங்காட், உலு சிலாங்கூர், செப்பாங், கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.
இதனிடையே, கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் இதேபோன்ற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் இந்த எச்சரிக்கையின் கீழ் வருகின்றன.





