நாடு முழுவதும் காற்றின் தரம் சீராக உள்ளது; ஆரோக்கியமற்ற நிலை பதிவாகவில்லை

28 அக்டோபர் 2026, 2:46 AM
நாடு முழுவதும் காற்றின் தரம் சீராக உள்ளது; ஆரோக்கியமற்ற நிலை பதிவாகவில்லை

ஷா ஆலாம், அக். 28 — மலேசியா முழுவதும் இன்று காலை எந்தவொரு பகுதியிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகவில்லை.

மலேசிய காற்று மாசுக் குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) தரவுகளின் அடிப்படையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள 25 இடங்களில் காற்றின் தரம் நல்ல நிலையில் பதிவாகியுள்ளது. அதேவேளையில், மேலும் 43 பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்தவரை, கோலா சிலாங்கூரில் காற்றின் தரம் நல்ல நிலையில் இருப்பதுடன், காற்று மாசுக் குறியீடு (IPU) 37ஆகப் பதிவாகியுள்ளது. மாநிலத்தின் மேலும் ஐந்து பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படுகிறது.

பெட்டாலிங் ஜெயாவில் காற்று மாசுக் குறியீடு 55-ஆகவும், பந்திங்கில் 56-ஆகவும், கிள்ளானில் 59-ஆகவும் பதிவாகியுள்ளது. அதேவேளையில், ஷா ஆலாம் மற்றும் ஜோஹான் செத்தியா ஆகிய பகுதிகளில் தலா 62 என குறியீடு பதிவாகியுள்ளது.

தேசிய அளவில், பினாங்கின் பாலிக் பூலாவ் பகுதியில் காற்று மாசுக் குறியீடு மிகக் குறைந்த அளவாக 11-ஆகப் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, கெடாவின் லங்காவியில் 13 என்ற குறியீடு பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், ஜோகூர் மாநிலத்தின் பத்து பஹாட்டில் தேசிய அளவில் அதிகபட்சமாக 92 என்ற காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது. எனினும், இந்த அளவு சுற்றுச்சூழல் துறையின் வகைப்படுத்தலின்படி மிதமான பிரிவுக்குள் அடங்குகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.