சிலாங்கூரில் 5 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை

21 அக்டோபர் 2026, 2:05 AM
சிலாங்கூரில் 5 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை

ஷா ஆலாம், அக். 21 – இன்று காலை 9 மணி நிலவரப்படி சிலாங்கூரில் ஐந்து இடங்களில் காற்றின் தரக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

காற்றுத் தர மேலாண்மை அமைப்பின் (APIMS) இணையத் தளத் தகவலின்படி, கிள்ளான், பந்திங் மற்றும் ஜோஹான் செத்தியா ஆகிய பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு அதிகபட்சமாக 159 ஆகப் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயா மற்றும் ஷா ஆலாம் ஆகிய பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 157 ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், சிலாங்கூரில் மிதமான காற்றுத் தரத்தைக் கொண்ட ஒரே பகுதியாக கோலா சிலாங்கூர் தொடர்ந்து விளங்குகிறது. அங்கு காற்றுத் தரக் குறியீடு 81 ஆகப் பதிவாகியுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் செராஸ் வட்டாரத்தில் காற்றுத் தரக் குறியீடு 159 ஆகப் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, பத்து மூடா மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் தலா 158 என்ற அளவில் காற்றுத் தரக் குறியீடு உள்ளது.

நாடு முழுவதும் ஒப்பிடுகையில், மலாக்காவின் புக்கிட் ரம்பாய் பகுதியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு காற்றுத் தரக் குறியீடு 174 ஆகப் பதிவாகியுள்ளது.

அதேவேளையில், பண்டாராயா மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலானின் நீலாய் ஆகிய பகுதிகளில் தலா 161 என்ற காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 68 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளின்படி, 22 நிலையங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும், 39 நிலையங்களில் மிதமான காற்றுத் தரமும், ஏழு நிலையங்களில் நல்ல காற்றுத் தரமும் பதிவாகியுள்ளன.

பொதுமக்கள் தற்போதைய காற்றுத் தர நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, தங்களது உடல்நலத்தைப் பாதுகாக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.