47 உயர்கல்வி மாணவர்கள் மடிக்கணினி, ஓராண்டு இலவச இணைய வசதியைப் பெற்றனர்

27 அக்டோபர் 2026, 9:49 AM
47 உயர்கல்வி மாணவர்கள் மடிக்கணினி, ஓராண்டு இலவச இணைய வசதியைப் பெற்றனர்
47 உயர்கல்வி மாணவர்கள் மடிக்கணினி, ஓராண்டு இலவச இணைய வசதியைப் பெற்றனர்
47 உயர்கல்வி மாணவர்கள் மடிக்கணினி, ஓராண்டு இலவச இணைய வசதியைப் பெற்றனர்
47 உயர்கல்வி மாணவர்கள் மடிக்கணினி, ஓராண்டு இலவச இணைய வசதியைப் பெற்றனர்

ஷா ஆலாம், அக் 27 : சிலாங்கூர் மந்திரி பெசார் அறக்கட்டளை மூலமாகப் பொது - தனியார் உயர்கல்வி கூடங்களைச் சேர்ந்த மொத்தம் 47 மாணவர்கள் தங்களின் கல்வியைச் தடையின்றித் தொடர்வதற்காக இலவச மடிக்கணினிகளையும், ஓராண்டுக்கான இலவச இணைய வசதியையும் பெற்றுள்ளனர்.

இவ்வாண்டுக்கான இரண்டாவது குழுவினருக்கான விநியோகம் இதுவென்றும், சிலாங்கூர் மாணவர்களின் கல்விக்கு ஆதரவளிப்பதில் அறக்கட்டளையின் தொடர்ச்சியான கடப்பாட்டினை இது நிரூபிக்கிறது என்றும் அந்த அறக்கட்டளையின் தலைவர் அஹ்மத் அஸ்ரி ஜைனல் நோர் தெரிவித்தார்.

மாணவர்கள் தங்களின் கல்வி சார்ந்த விஷயங்களை இணையம் வழி அணுகவும், இணையம் வழி கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை எளிதாக்கவும் 12 மாத கால இலவச இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது.

"மடிக்கணினி வழங்கும் இந்த திட்டத்தை நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் நடத்தி வருகிறோம்.

ஏனெனில் மாணவர்களுக்குக், கற்றலுக்குத் தேவையான வசதிகள் இருப்பதை உறுதிசெய்து அவர்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம். இந்த மடிக்கணினிகளை மாணவர்கள் தங்களின் படிப்பிற்குச் சிறந்த முறையில் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்," என அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

சமீபத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்சேவை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த உதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அஹ்மத் அஸ்ரி கூறினார்.

மேலும், த்ரெட்ஸ் (Threads) தளத்தில் வைரலான பகிர்வின் மூலம் இந்த உதவியைப் பற்றித் தெரிந்துகொண்டு சிலாங்கூர் அறக்கட்டளையைத் தொடர்புகொண்ட மாணவர்களும் இதில் அடங்குவர்.

சிலாங்கூர் பிள்ளைகளின் கல்விக்கு உரிய ஆதரவை வழங்குவதை மாநில அரசு எப்போதும் தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகக் கருதுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, வழங்கப்பட்ட இந்த மடிக்கணினிகள் 12 மாத இலவச இணைய சேவைக்கான சிம் (SIM) கார்டுடன் சேர்த்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.