பள்ளி மாணவி மரணம்: விசாரணையை விரைவுபடுத்த MBI அறக்கட்டளை வலியுறுத்து

21 அக்டோபர் 2026, 6:58 AM
பள்ளி மாணவி மரணம்: விசாரணையை விரைவுபடுத்த MBI அறக்கட்டளை வலியுறுத்து

கிள்ளான், அக். 21 – டெங்கில் தேசியப் பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விரைந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிலாங்கூர் மந்திரி பெசார் அறக்கட்டளை (யாயாசான் எம்பிஐ) வலியுறுத்தியுள்ளது.

அலட்சியம் உட்பட, மாணவியின் மரணத்திற்கான அனைத்து சாத்தியமான காரணங்களும் முழுமையாக ஆராயப்பட வேண்டும் என்று யாயாசான் எம்பிஐ தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனால் நோர் தெரிவித்தார்.

விசாரணை விரிவாகவும் முறையாகவும் நடத்தப்படுவது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.

மாணவி தமியா நூர் மிகாய்லா

உணவு தொண்டையில் சிக்கியதால் மாணவி உயிரிழந்திருக்கலாம் என்பது விசாரணையில் தெரியவந்தால், பள்ளிக்குள் கொண்டு வரப்படும் உணவு வகைகள் குறித்து பள்ளி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், உயிரிழந்த மாணவி தமியா நூர் மிகாய்லாவின் குடும்பத்தினரை யாயாசான் எம்பிஐ பிரதிநிதிகள் விரைவில் நேரில் சந்தித்து, நிதியுதவி வழங்கவுள்ளனர்.

சமூக ஊடகங்களில் இச்சம்பவம் குறித்த செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தம்மிடம் சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து உதவிகளை வழங்குமாறு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

மேலும், சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காகச் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை (JPN) மற்றும் செப்பாங் மாவட்டக் கல்வி அலுவலகம் (PPD) ஆகியவற்றுடனும் தமது தரப்பு தொடர்புகொண்டுள்ளதாக அஹ்மட் அஸ்ரி குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.