சிலாங்கூர் ஊட்டச்சத்து திட்டம் எஸ்பிஎம் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்

22 அக்டோபர் 2026, 3:22 PM
சிலாங்கூர் ஊட்டச்சத்து திட்டம் எஸ்பிஎம் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்
சிலாங்கூர் ஊட்டச்சத்து திட்டம் எஸ்பிஎம் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்

ஷா ஆலாம், அக் 22 - சிலாங்கூர் மாநில அரசாங்கம், NutriSel எனப்படும் மெகா சிலாங்கூர் ஊட்டச்சத்து திட்டத்தை, எஸ்பிஎம் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறது.

சிலாங்கூர் மந்திரி பெசார் அறவாரியத்தின் (Yayasan MBI) தலைவர் அஹ்மாத் அஸ்ரி சைனல் நோர் இதனைத் தெரிவித்தார்.

மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் காலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்க வாய்ப்புள்ளது என்றும், இதன் அதிகாரப்பூர்வ அமலாக்கத் தேதியை மாநில மந்திரி பெசார் அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலாம், சுல்தான் சலாஹுடின் அப்துல் அசிஸ் ஷா பள்ளிவாசலில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டப் பின்னர், அஹ்மாத் அஸ்ரி இந்த தகவலைப் பகிர்ந்துக் கொண்டார்.

சிலாங்கூரில் எஸ்பிஎம் தேர்வெழுதவிருக்கும் மாணவர்களின் நலனைப் பேணும் அதே வேளை, அவர்களின் தேர்ச்சி அடைவுநிலையை மேம்படுத்தவும் மாநில அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு கல்வி சார்ந்த முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

முன்னதாக அக்டோபர் 5-ஆம் தேதி, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி , மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு இந்த ஊட்டச்சத்து திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், இதில் பால் மற்றும் ரொட்டி போன்ற நீண்ட காலம் கெடாத உணவுப் பொருட்கள் கூடுதலாகச் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் வழக்கமான ஊட்டச்சத்து திட்டம், மாத வருமானம் 2,000 ரிங்கிட்டிற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 4,640 மாணவர்களை உள்ளடக்கியுள்ளது.

இவர்களுக்கு வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய இரு தினங்களில் வழங்கப்படும் இந்த உணவு உதவித் திட்டம் வரும் நவம்பர் தொடக்கம் வரை தொடர்ந்து நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.