ஓராண்டு மேலாகியும் கோரப்படாத 50, 3 சக்கர சைக்கிள்கள் அழிக்கப்பட்டன

26 அக்டோபர் 2026, 11:10 AM
ஓராண்டு மேலாகியும் கோரப்படாத 50, 3 சக்கர சைக்கிள்கள் அழிக்கப்பட்டன
ஓராண்டு மேலாகியும் கோரப்படாத 50, 3 சக்கர சைக்கிள்கள் அழிக்கப்பட்டன
ஓராண்டு மேலாகியும் கோரப்படாத 50, 3 சக்கர சைக்கிள்கள் அழிக்கப்பட்டன

ஷா ஆலாம், அக் 10 - ஓராண்டு மேலாகியும் உரிமையாளர்கள் கோராததை அடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 50, மூன்று சக்கர சைக்கிள்களை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் அழித்தது.

அந்த சைக்கிள்கள் அனைத்தும், அம்மன்றத்தின் அமலாக்க நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.

கடந்தாண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில், 62, 3 சக்கர மோட்டார் சைக்கிள்களும், 56 , மூன்று சக்கர சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தெரிவித்தது.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த வாகனங்களை ஓராண்டு மட்டுமே மாநகர் மன்றம் வைத்திருக்கும். அக்கால கட்டத்திற்குப் பின்னர் கோரப்படாத வாகனங்களை அழிக்கும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டதாக , அம்மாநகர் மன்றம் அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

அந்த அழிக்கும் நடவடிக்கைகள், பூச்சோங் பண்டார் புத்ரி ஹைபெர்மெடியா நூலக வளாகத்தில், குடிநுழைவுத் துறை, போலீஸ், சாலை போக்குவரத்து துறை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டன

பொதுவிடங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதையும், சட்டவிரோதமாக வியாபாரங்கள் மேற்கொள்ளப்படுவதையும் தடுப்பதோடு, சுபாங் ஜெயா மாநகர் பாதுகாப்புடன் இருப்பதை உறுதிச் செய்ய, அமலாக்க நடவடிக்கைகள் தொடருமெனவும், அம்மன்றம் குறிப்பிட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.