சுபாங் ஜெயாவில் 200-க்கும் மேற்பட்ட விவேக வாகன நிறுத்தமிட CCTV கேமராக்கள் பொருத்தம்

19 ஆகஸ்ட் 2026, 2:45 AM
சுபாங் ஜெயாவில் 200-க்கும் மேற்பட்ட விவேக வாகன நிறுத்தமிட CCTV கேமராக்கள் பொருத்தம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 19 — சிலாங்கூர் மாநிலத்தின் விவேக வாகன நிறுத்தமிடம் (SIP) திட்டத்தின் கீழ், சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ) நிர்வாகப் பகுதியில் இதுவரை 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன

MBSJ பகுதியில் மொத்தம் 500 CCTV கேமராக்களைப் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது எஞ்சிய கேமராக்களை பொருத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சி விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூ லிம் தெரிவித்தார்.

எனினும், கேமராக்கள் பொருத்தப்படும் இடங்களில் மின்சார விநியோகத்தை உறுதி செய்வது உள்ளிட்ட சில தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பில் இன்னும் ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு CCTV கேமராவும் முறையாகச் செயல்படுவதற்குத் தேவையான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதில் தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்துடனான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.

SIP திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் செயல்திறனை மாநில அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்றார் அவர்.

“வசூல் நடைமுறைகள் சீராக நடைபெறுவதையும், போக்குவரத்து நிர்வாகம் மேம்படுவதையும், வாகன நிறுத்துமிடங்கள் முறையாக நிர்வகிக்கப்படுவதையும் மாநில அரசும் உள்ளாட்சி அதிகாரிகளும் உறுதி செய்வர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.