சுபாங் உத்தாமா தேசிய இடைநிலைப் பள்ளிக்கு RM10,000 நிதியுதவி வழங்கப்பட்டது- சட்டமன்ற உறுப்பினர்

3 ஆகஸ்ட் 2026, 2:01 AM
சுபாங் உத்தாமா தேசிய இடைநிலைப் பள்ளிக்கு RM10,000 நிதியுதவி வழங்கப்பட்டது- சட்டமன்ற உறுப்பினர்
சுபாங் உத்தாமா தேசிய இடைநிலைப் பள்ளிக்கு RM10,000 நிதியுதவி வழங்கப்பட்டது- சட்டமன்ற உறுப்பினர்

ஷா ஆலாம், ஆக்ஸ்ட் 3 - சுபாங் உத்தாமா தேசிய இடைநிலைப் பள்ளி மண்டபத்திற்கான புதிய மேசைகள் மற்றும் நாற்காலிகளை வாங்குவதற்காகப் பத்தாயிரம் ரிங்கிட் நிதியுதவியை சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷெல் இங் மெய் ஸீ, வழங்கியுள்ளார்.

தமது முகநூல் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ள அவர், பள்ளி மாணவர்களின் வசதியை மேம்படுத்துவதே இந்த நிதியுதவியின் முக்கிய நோக்கம் என்றும், குறிப்பாக மண்டபத்தைப் பல்வேறு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நேரில் சென்று பார்வையிடுவதற்காக மிஷெல் அப்பள்ளிக்குச் பயணம் மேற்கொண்டார். அங்கு, வழங்கப்பட்ட நிதி சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு அவர் தமது திருப்தியை வெளிப்படுத்தினார்.

பள்ளிகளுக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு முதலீடும் நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகச் செய்யப்படும் முதலீடாகும் என்று குறிப்பிட்ட அவர், மாணவர்களின் வசதிக்கும் நலனுக்கும் இந்த நிதி மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

இந்தச் பயணத்தின் போது, பள்ளி வளாகத்தில் மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய சில பகுதிகளைப் பள்ளி நிர்வாகம் அவரது பார்வைக்குக் கொண்டு சென்றது.

மாணவர்களின் வசதிகளையும் கல்விச் சூழலையும் மேம்படுத்தும் நோக்கில் நிதியை மிகவும் பொறுப்புடன் கையாண்ட பள்ளி நிர்வாகத்தினருக்கு மிஷெல் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.