இளையோரைக் கவரும் கலாச்சார நிகழ்ச்சிகளை சிலாங்கூர் அரசாங்கம் விரிவுப்படுத்தும்

26 அக்டோபர் 2026, 4:11 AM
இளையோரைக் கவரும்  கலாச்சார நிகழ்ச்சிகளை சிலாங்கூர் அரசாங்கம் விரிவுப்படுத்தும்
இளையோரைக் கவரும்  கலாச்சார நிகழ்ச்சிகளை சிலாங்கூர் அரசாங்கம் விரிவுப்படுத்தும்
இளையோரைக் கவரும்  கலாச்சார நிகழ்ச்சிகளை சிலாங்கூர் அரசாங்கம் விரிவுப்படுத்தும்

ஷா ஆலம், அக் 25 - கலை - கலாச்சாரத் திட்டங்களை, குறிப்பாக இளைய தலைமுறையினரை உள்ளடக்கிய திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக, சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஊராட்சி அமைப்புகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.

கலை, கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, சிலாங்கூரின் பல்லின சமூகங்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என வீடமைப்பு, கலாச்சாரத்திற்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.

"சிலாங்கூர் அரசாங்கம், மாநில கலாச்சார குழுவின் மூலமாக, சமூகங்களை ஒன்றிணைக்கும் மற்றும் பன்முகத்தன்மையில் ஒற்றுமையை வளர்க்கும் கலாச்சார திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு ஊராட்சி அமைப்புகளுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும்," என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 24) அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, 'ஃபாண்டாசியா ஃபுட் ஃபெஸ்ட் @ எம்பிஏஜே 2026' (Fantasia Food Fest @ MPAJ 2026) நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட கலாச்சார இரவும் இத்தகைய ஒரு முயற்சி என்று போர்ஹான் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கான நடனப் போட்டி நடைபெற்றது.

இதில் மலேசிய தாள நடனம் மற்றும் சிலாட் தாரி (Silat Tari) ஆகிய பிரிவுகளில் 20 குழுக்கள் போட்டியிட்டன.

பள்ளிகளுடன் இணைந்து கலாச்சார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் காட்டிய அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், இதன் மூலம் இளைய தலைமுறையினர் இதில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவதாகவும், கலை பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய இது உதவுவதாகவும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.