‘Trash to Cash’ திட்டம்: 1,577.6 கிலோ மறுசுழற்சி பொருட்கள் சேகரிப்பு

13 செப்டெம்பர் 2026, 8:43 AM
‘Trash to Cash’ திட்டம்: 1,577.6 கிலோ மறுசுழற்சி பொருட்கள் சேகரிப்பு

ஷா ஆலாம், செப்.13 — அம்பாங் ஜெயா ஊராட்சி மன்றம் (எம்.பி.ஏ.ஜே.) ஏற்பாடு செய்த ‘Trash to Cash’ எனும் திட்டத்தின் மூலம் 1,577.6 கிலோகிராம் மறுசுழற்சி பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

இந்தத் திட்டம், அம்பாங் ஜெயா ஊராட்சி மன்றத்தின் நகர்ப்புற சேவைகள் மற்றும் சுகாதாரத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

தாமான் கெராமாட் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற சேகரிப்பு நடவடிக்கையில் மொத்தம் 321.2 கிலோகிராம் மறுசுழற்சி பொருட்கள் திரட்டப்பட்டன.

இதனிடையே, கம்போங் பண்டான் டாலாமில் உள்ள ஜே.கே.கே.பி. மண்டபத்தில் நடைபெற்ற ‘Trash to Cash’ திட்டத்தில் அதைவிட அதிகமாக, 1,256.4 கிலோகிராம் மறுசுழற்சி பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

இத்திட்டத்தின் வாயிலாக, மறுசுழற்சி தொடர்பான விழிப்புணர்வுக் கல்வியை வழங்குவதுடன், மறுசுழற்சி நடைமுறைகளை ஊக்குவித்து, கழிவுகளை முறையாகக் கையாளும் வழிமுறைகள் குறித்த தகவல்களையும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சமூகத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், இதுபோன்ற மறுசுழற்சி திட்டங்களைத் தொடர்ந்து ஏற்பாடு செய்ய எம்.பி.ஏ.ஜே. உறுதிபூண்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களின் மறுசுழற்சி நடவடிக்கைகளில் பங்கேற்பை மேலும் அதிகரித்து, தூய்மையான, பசுமையான மற்றும் நிலைத்தன்மை மிக்க சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற முடியும் என எம்.பி.ஏ.ஜே. நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.