அம்பாங் அடுக்குமாடிக் குடியிருப்பில் டிங்கி தடுப்பு நடவடிக்கை; 24 அபராதங்கள் விதிப்பு

17 ஆகஸ்ட் 2026, 5:52 AM
அம்பாங் அடுக்குமாடிக் குடியிருப்பில் டிங்கி தடுப்பு நடவடிக்கை; 24 அபராதங்கள் விதிப்பு

அம்பாங், ஆகஸ்ட் 17 — பண்டார் பாரு அம்பாங், ஸ்ரீ நீலாம் அடுக்குமாடிக் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட டிங்கி தடுப்பு நடவடிக்கையில் 24 அபராதங்கள் விதிக்கப்பட்டதாக அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) தெரிவித்துள்ளது.

டிங்கி சம்பவங்கள் அதிகம் ஏற்படும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள அக்குடியிருப்பில் டிங்கி பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த தடுப்பு நடவடிக்கையை MPAJ-யின் நகர சேவை மற்றும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டனர்.

சோதனைகளின் முடிவில், விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட இடங்களுக்கு 24 அபராதங்கள் விதிக்கப்பட்டன.

இதனிடையே, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் குடியிருப்பு சுற்றுப்புறங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என MPAJ கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய நீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு அகற்றுவது டிங்கியைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என MPAJ அறிவுறுத்தியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.