சிலாங்கூரில் காற்றின் தரம் சீரடைந்து வருகிறது; குறியீடு 53-க்கு கீழ் பதிவு

26 அக்டோபர் 2026, 2:18 AM
சிலாங்கூரில் காற்றின் தரம் சீரடைந்து வருகிறது; குறியீடு 53-க்கு கீழ் பதிவு
சிலாங்கூரில் காற்றின் தரம் சீரடைந்து வருகிறது; குறியீடு 53-க்கு கீழ் பதிவு

ஷா ஆலாம், அக் 26: சிலாங்கூரில் உள்ள அனைத்து ஆறு காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களும் இன்று காலை 8 மணி நிலவரப்படி 39 முதல் 53 வரையிலான காற்று மாசு குறியீட்டு (IPU) அளவைப் பதிவு செய்துள்ளதால், மாநிலத்தின் காற்றின் தரம் தொடர்ந்து நல்ல மற்றும் மிதமான அளவிலேயே நீடிக்கிறது.

சிலாங்கூர் மாநிலத்தில் கோலா சிலாங்கூர் அதிகபட்சமாக 53 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கிள்ளான் (50), ஜோஹான் செத்தியா (43), ஷா ஆலாம் மற்றும் பெட்டாலிங் ஜெயா (42) மற்றும் பந்திங் (39) ஆகிய இடங்கள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

இந்த புள்ளி விவரங்கள் சிலாங்கூரின் அனைத்து கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றின் தரம் இன்னும் ஆரோக்கியமான மற்றும் மிதமான பிரிவிலேயே இருப்பதை உணர்த்துகின்றன.

மாநிலத்தில் எந்தவொரு பகுதியிலும் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவாகவில்லை.

இதனிடையே, தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்கில் உள்ள மொத்தம் 29 பகுதிகள் நல்ல காற்று மாசு குறியீட்டையும், 32 பகுதிகள் மிதமான காற்று மாசு குறியீட்டையும் பதிவு செய்துள்ளன.

இருப்பினும், சரவாக்கில் உள்ள ஏழு பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீட்டைப் பதிவு செய்துள்ளன. அங்குள்ள செரியான் மாவட்ட போலீஸ் தலைமையக கண்காணிப்பு நிலையம் மிக அதிகபட்சமாக 172 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது.

சரவாக்கின் இதர பகுதிகளான சமரஹான் 158 புள்ளிகளையும், கூச்சிங் 158, சரிகேய் 157, சிபு 155, ஸ்ரீ அமான் 129 மற்றும் முக்கா 116 புள்ளிகளையும் பதிவு செய்துள்ளன.

காற்று மாசு குறியீட்டு மேலாண்மை முறையின் (APIMS) வலைத்தளத்தில் இந்த புள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.