சரவாக்கில் மோசமடைந்த புகைமூட்டம்; 236-ஐ எட்டிய காற்று மாசு

12 செப்டெம்பர் 2026, 9:39 AM
சரவாக்கில்  மோசமடைந்த புகைமூட்டம்; 236-ஐ எட்டிய காற்று மாசு

கோலாலம்பூர், செப். 12: சரவாக், செரியான் பகுதியில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு குறியீடு (IPU) 236ஆக பதிவாகியுள்ளது.

இது ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ காற்றுத் தரப் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சரவாக்கில் மேலும் நான்கு பகுதிகளில் காற்றுத் தரம் ‘ஆரோக்கியமற்ற’ நிலையில் பதிவாகியுள்ளது.

ஸ்ரீ அமானில் IPU 199ஆகவும், சமரஹானில் 179ஆகவும், கூச்சிங்கில் 174ஆகவும், சரிகேயில் 115ஆகவும் பதிவாகியுள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் 50 பகுதிகளில் காற்று மாசு குறியீடு மிதமான நிலையில் பதிவாகியுள்ளது. மேலும் 12 பகுதிகளில் காற்றுத் தரம் நல்ல நிலையில் காணப்படுகிறது.

சரவாக்கில் காற்றுத் தரம் தொடர்ந்து மோசமாகக் காணப்படும் நிலையில், பொதுமக்கள் தற்போதைய IPU அளவீடுகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்ப்பது அவசியமாகும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.