ஷா ஆலாம், அக் 22 : சிலாங்கூரில் ஐந்து பகுதிகள் இன்று காலை 10 மணி நிலவரப்படி தொடர்ந்து ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டை (IPU) பதிவு செய்தன.
இதில் கிள்ளான் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய பகுதிகள் அதிகபட்சமாக 155 என்ற புள்ளிகளைப் பதிவு செய்தன.
ஜோஹான் செத்தியா 154 என்ற குறியீட்டையும், அதைத் தொடர்ந்து ஷா ஆலம் (152) மற்றும் பந்திங் (130) ஆகிய இடங்களும் ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்தன.
இதற்கிடையில், நாடு முழுவதிலும் ஆரோக்கியமற்ற காற்றுத் தரத்தைப் பதிவு செய்த 15 பகுதிகளில் நீலாய் அதிகபட்சமாக 164 என்ற புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மேலும், சிரம்பான் (155) மற்றும் போர்ட் டிக்சன் (151) ஆகிய பகுதிகளும் இதில் அடங்கும்.
மலாக்காவில் புக்கிட் ரம்பாய் (158) மற்றும் மலாக்கா மாநகரம் (136) ஆகிய இடங்களிலும், ஜோகூரில் தங்காங் (153) மற்றும் பாசிர் கூடாங் (110) ஆகிய இடங்களிலும் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.
கோலாலம்பூரில் பத்து மூடா (153) மற்றும் செராஸ் (136) ஆகிய இரு பகுதிகளும், புத்ராஜெயாவில் (140) என்ற அளவிலும் ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு பதிவாகியது.
அதே வேளையில், நாடு முழுவதும் 50 பகுதிகள் நடுத்தர அளவிலான காற்றுத் தரத்தையும், மூன்று பகுதிகள் மட்டுமே நல்ல நிலையிலும் நீடிப்பதாக APIMS -மலேசிய காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டு நிர்வாக முறையின் தரவு காட்டுகிறது.







