ஷா ஆலாம், செப் 20 : சிலாங்கூரில் உள்ள மூன்று பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீட்டைப் பதிவு செய்தன.
இன்று காலை 10.30 மணி நிலவரப்படி, ஷா ஆலாம் அதிகபட்சமாக 153 என்ற அளவைப் பதிவு செய்தது.
மலேசிய காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீட்டு நிர்வகிப்பு அமைப்பின் (APIMS Portal) தரவுகளின்படி, பெட்டாலிங் ஜெயா 107 என்ற அளவையும், ஜோஹான் செத்தியா 102 என்ற குறியீட்டையும் பதிவு செய்தன.
ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் 23 பகுதிகள் ஆரோக்கியமற்ற நிலையிலும், 39 பகுதிகள் மிதமான நிலையிலும், ஐந்து பகுதிகள் நல்ல நிலையிலும் உள்ளன.
சரவாக்கில் உள்ள செரியன் மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD Serian) நாட்டின் மிக உயர்ந்த ஏபிஐ அளவாக 182- ஐப் பதிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து சமரஹான் (169), கூச்சிங் (165) மற்றும் ஸ்ரீ அமான் (162) ஆகிய பகுதிகள் உள்ளன.
ஜொகூரில், லார்கின் 161 என்ற அளவை எட்டியுள்ளது. அதே நேரத்தில் பத்து பகாட், செகாமட், தங்காங் மற்றும் பாசிர் கூடாங் ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றும் 153 முதல் 155 வரையிலான காற்றுத் தூய்மைக் கேட்டினைப் பதிவு செய்துள்ளன.
புத்ராஜெயா மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள நீலாய் ஆகிய பகுதிகள் தலா 155 என்ற அளவைப் பதிவு செய்துள்ள வேளையில், சரவாக்கின் பிந்துலு 154 என்ற அளவைக் காட்டியுள்ளது.
ஆரோக்கியமற்ற நிலையில் உள்ள மற்ற பகுதிகளில் சிபு (152), சிரம்பான் (140), செராஸ் (138), மலாக்கா மாநகரம் (122), புக்கிட் ரம்பாய் (121), சமாலாஜு (111), கோத்தா கினபாலு பாலிடெக்னிக் (111) மற்றும் சரிகேய் (108) ஆகியவை அடங்கும்.







