பிரெஞ்சு பொது விருதைக் கைப்பற்றத் தவறினர் பியர்லி- தினா இணையினர்

26 அக்டோபர் 2026, 12:45 AM
பிரெஞ்சு பொது விருதைக் கைப்பற்றத் தவறினர் பியர்லி- தினா இணையினர்

பாரிஸ், அக் 26 : பியர்லி டான் - எம். தினா இணையினர், பிரெஞ்ச் பொது விருதைக் கைப்பற்றத் தவறினர்.

அதன் இறுதியாட்டத்தில், உலகின் 5-ஆம் நிலை ஜோடியான பியர்லி - தினா, ஜப்பானின் முன்னணி ஜோடியான யுகி புகுஷிமா - மாயு மத்சுமோட்டோவிடம் 21-10, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வியடைந்தனர்.

பாரிஸ் கிராண்ட் அரேனாவில், 61 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான போட்டியில், முதல் செட்டை மலேசிய ஜோடியினர் கைப்பற்றிய போதிலும், அடுத்தடுத்த செட்களை ஜப்பானிய ஜோடியினர் அதிரடியாக விளையாடி ஆட்டத்தைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர்.

கடந்த வாரம் டென்மார்க் பொது விருதினை வென்ற பியர்லி - தினா ஜோடியினர், இவ்வாரம் இரண்டாவது பிரெஞ்சு பொது விருதினைக் கைப்பற்றுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், தொடர்ந்து இரு வாரங்களில் அடுத்தடுத்து இரு உலக டூர் சூப்பர் 750 (World Tour Super 750) இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறியது மலேசிய ஜோடியினரின் ஒரு சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது.

இதனிடையே, மற்றொரு இறுதிப்போட்டியில், மலேசியாவின் ஹூ பாங் ரோன் - லாய் பெய் ஜிங் கலப்பு இரட்டையர் ஜோடியினர், சீனாவின் முன்னணி ஜோடியான பெங் யான்ஷே - ஹுவாங் டோங்பிங்கிடம் 10-21, 13-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தனர்.

சீன ஜோடிக்கு இது தொடர்ச்சியான மூன்றாவது விருதாகும்.

இருப்பினும், மலேசியாவின் பாங் ரோன் - பெய் ஜிங் ஜோடியினர் தங்களின் முதல் சூப்பர் 750 இறுதிப்போட்டி வரை முன்னேறி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.