டென்மார்க் பொது பூப்பந்து போட்டி: வெற்றியாளர் பட்டத்தை வென்றனர் பியர்லி–தீனா ஜோடி

18 அக்டோபர் 2026, 3:01 PM
டென்மார்க் பொது பூப்பந்து போட்டி: வெற்றியாளர் பட்டத்தை வென்றனர் பியர்லி–தீனா ஜோடி

கோலாலம்பூர், அக். 18 – மலேசியாவின் முன்னணி மகளிர் இரட்டையர் பூப்பந்து ஜோடியான பியர்லி–எம். தீனா, 2026 டென்மார்க் பொது போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இன்று ஒடென்ஸ் நகரிலுள்ள SJF பேங்க் அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், மலேசியாவின் இரண்டாம் நிலை ஜோடியான பியர்லி–எம். தீனா, ஜப்பானின் ஹினாட்டா சுசுகி–நாவோ யமகிட்டா ஜோடியை நேரடி செட்களில் வீழ்த்தி மகுடம் சூடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், மலேசிய ஜோடி 21-18, 21-11 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. மொத்தம் 36 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், ஜப்பானிய வீராங்கனைகள் கடும் சவாலை அளித்தபோதிலும், தங்களது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி மலேசியா ஜோடி வெற்றியை உறுதிசெய்தது.

குறிப்பாக, முதல் செட்டில் இரு ஜோடிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஜப்பானிய ஜோடி தொடர்ந்து நெருக்கடி கொடுத்த நிலையில், முக்கியமான தருணங்களில் புள்ளிகளைக் கைப்பற்றிய பியர்லி–தீனா முதல் செட்டை 21-18 என தன்வசப்படுத்தினர்.

இரண்டாவது செட்டிலும் ஜப்பானிய ஜோடி மீண்டெழ முயன்றது. இருப்பினும், ஆட்டத்தின் வேகத்தையும் கட்டுப்பாட்டையும் தங்கள் வசம் வைத்திருந்த மலேசிய வீராங்கனைகள், 21-11 என்ற புள்ளிக் கணக்கில் அந்தச் செட்டையும் கைப்பற்றி வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் சென்றனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு, மலேசியாவின் சின் ஈ ஹுய்–வோங் பெய் டி ஜோடி இந்தப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. தற்போது பியர்லி–தீனா ஜோடியும் அதே சாதனையைப் படைத்துள்ளது.

மேலும், இந்த ஆண்டில் பியர்லி–தீனா இணை வெல்லும் இரண்டாவது பட்டம் இதுவாகும். இதற்கு முன்னதாக, ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியிலும் அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தனர்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.