ஆசிய விளையாட்டுப் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய பியர்லி - தீனா ஜோடிக்கு பதக்கம் உறுதி

27 செப்டெம்பர் 2026, 4:56 AM
ஆசிய விளையாட்டுப் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய பியர்லி - தீனா ஜோடிக்கு பதக்கம் உறுதி

அய்ச்சி, செப். 27 – ஆசிய விளையாட்டுப் போட்டியின் பூப்பந்து மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியா 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

உலகத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள பியர்லி தான்-எம் தீனா இணை, அய்ச்சி-நகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது.

காலிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 26ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-ட்ரீசா ஜாலி இணையை 21-18, 21-9 என்ற நேர் செட்களில் 42 நிமிடங்களில் பியர்லி - தீனா இணை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம், 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிய விளையாட்டின் மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் பதக்க வறட்சி முடிவுக்கு வந்துள்ளது.

மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியா கடைசியாக 2014ஆம் ஆண்டு இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றிருந்தது. அப்போது விவியன் ஹூ-வூன் கே வீ இணை வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

அரையிறுதியில் உலகின் முதல்நிலை மகளிர் இரட்டையர் இணையான சீனாவின் லியு ஷெங் ஷு-டான் நிங் இணையை மலேசிய ஜோடி எதிர்கொள்ளவுள்ளது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.