ஆசிய விளையாட்டுப் போட்டி: பியர்லி-தீனா ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்

28 செப்டெம்பர் 2026, 6:42 AM
ஆசிய விளையாட்டுப் போட்டி: பியர்லி-தீனா ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்

பெட்டாலிங் ஜெயா, செப்.28: ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் மகளிர் இரட்டையர் பூப்பந்து வீராங்கனைகளான பியர்லி தான்–எம். தீனா வெண்கலப் பதக்கத்துடன் விடைபெற்றனர்.

85 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் லியூ ஷெங் ஷு–டான் நிங் இணையிடம் மலேசிய ஜோடி போராடி தோல்வியடைந்தது.

உலகத் தரவரிசையில் ஐந்தாம் நிலையில் உள்ள பியர்லி–தீனா, போட்டியின் தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் செட்டை 21-16 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினர்.

எனினும், இரண்டாவது செட்டில் கடுமையாகப் போராடிய சீன ஜோடி 22-20 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தது.

தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் 21-12 என்ற புள்ளிக் கணக்கில் சீன ஜோடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இந்த வெண்கலப் பதக்கம் மலேசிய மகளிர் இரட்டையர் பிரிவுக்கு 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்துள்ள பரிசாகும்.

2014ஆம் ஆண்டு தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் விவியன் ஹூ–வூன் கே வேய் இணை வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.

இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசிய மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்வதற்கான 12 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இருப்பினும், ஆசிய விளையாட்டுப் போட்டியின் 62 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை எந்தவொரு மலேசிய மகளிர் இரட்டையர் ஜோடியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.