மலாக்கா மாநிலத் தேர்தல்: ஹரப்பான் 21 வேட்பாளர்களைக் களமிறக்குகிறது

24 அக்டோபர் 2026, 3:41 PM
மலாக்கா மாநிலத் தேர்தல்: ஹரப்பான்  21 வேட்பாளர்களைக் களமிறக்குகிறது

குருபோங், அக் 24 - பக்காதான் ஹரப்பான் கூட்டணி மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காக 21 வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மலாக்கா குருபோங்கில் உள்ள ஹாங் ஜெபாட் அரங்கில் இன்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், பக்காதான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இந்த வேட்பாளர் அறிவிப்பின்படி மலாக்கா மாநில ஹரப்பான் தலைவரான அட்லி ஜஹாரி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தாம் தற்காத்து வரும் புக்கிட் காட்டில் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

அதேபோல் பிரதமரின் அரசியல் செயலாளரான டத்தோ அஸ்மான் அபிதீன், பாயா ரும்புட் சட்டமன்றத் தொகுதியில் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளராகக் களம் இறங்குகிறார்.

இந்த பாயா ரும்புட் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் பாஸ் கட்சியின் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக பக்காதான் ஹரப்பான் கூட்டணி போட்டியிடும் 21 தொகுதிகளில் கெஅடிலான் கட்சிக்கு ஒன்பது இடங்களும், டிஎபி கட்சிக்கு ஏழு இடங்களும், அமானா கட்சிக்கு ஐந்து இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக , இந்த வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் ஹரப்பான் கூட்டணியின் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமீருடின் ஷாரி, துணைத் தலைவர் அந்தோனி லோக் மற்றும் அமானா கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.