மதுபோதையால் ஏற்பட்ட விபத்து : DBKL குத்தகை பணியாளர் உயிரிழப்பு

24 அக்டோபர் 2026, 10:09 AM
மதுபோதையால் ஏற்பட்ட விபத்து : DBKL குத்தகை பணியாளர் உயிரிழப்பு

கோலாலம்பூர், அக் 24: கோலாலம்பூர், சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படும் நபரால் ஏற்பட்ட விபத்தில், சாலை பராமரிப்பு மேற்பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்; லாரி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார்.

காரை ஓட்டி வந்த 26 வயது ஓட்டுநரின் சுவாசத்தில் மதுவின் அளவு 64mg/100ml ஆகப் பதிவாகியிருந்ததாகக் கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க புலனாய்வுத் துறையின் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் முஹமட் சம்சூரி முகமட் ஈசா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், விசாரணைக்கு உதவும் வகையில் வரும் திங்கள்கிழமை வரை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5.00 மணியளவில், ஜாலான் டாமன்சாராவிலிருந்து நாடாளுமன்ற சாலையை நோக்கிச் சென்ற அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுறச் சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

"விபத்துக்குள்ளான மேற்பார்வையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளியான 49 வயது லாரி ஓட்டுநர் தலை மற்றும் வலது கையில் காயம் அடைந்து கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரின் ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.

முன்னதாக, ஒரு மேற்பார்வையாளர், ஒரு லாரி ஓட்டுநர் மற்றும் மூன்று வங்காளதேச தொழிலாளர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு, கோலாலம்பூர் மாநகர் மன்ற குத்தகையின் கீழ் எச்சரிக்கைப் பலகை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.